Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஜூலை 17 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்” என பலர் முயன்று வருகின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கோணாவில் யூனியன் குளம் பகுதி மக்களுடனான,மக்கள் சந்திப்பொன்றிலேயே, மேற்படு கருத்தை, சிறிதரன் நேற்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட மக்கள் என்ற ஓர் எண்ணத்துடன் தான் தாங்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே தவிர, பிரதேச வேறுபாடுகளுடன் நாங்கள் வாழவில்லை என்பதையும் இந்த மாவட்ட மக்களை வேறுபடுத்தி பார்க்கவேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளதோடு, வெளிநாடுகளில் குடும்பங்களை வைத்துக்கொண்டு, இங்கே வந்து அரசியல் செய்யும் சிலர், தங்களுடைய அரசியல் நோக்கங்கங்களுக்காக, மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி, விஷமக் கருத்துகளை விதைத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
“அண்மையில் கூட, என்னுடைய கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, போலிக் கடிதம் ஒன்றைத் தயாரித்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த மாவட்டத்தில் பிறந்து, இந்த மக்களுடன் வாழ்ந்து வருகின்றேன். மலையகத்தில் இருந்து 1956ம் ஆண்டு வந்த மக்களை, தருமபுரத்தில் குடியேற்றக்கூடாது என்று போர்க்கொடி தூக்கிய பலர் இங்கு இன்னும் இருக்கின்றனர். 1983ஆம் ஆண்டு ஏதிலிகளாக மலையகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை, மாயவனூரில் குடியேற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டவர்களில் நானும் ஒருவன். இந்நிலையில், அந்த மக்களை கொச்சைப்படுத்துவதற்கோ அல்லது அந்த மக்களை கீழ்மைப்படுத்துவற்கான எந்த வேலையையும் நான் செய்யமாட்டேன். தற்போதுள்ள நவீன தொழில் நுட்பங்கள் மூலம் அரசியலில் இருப்பவர்கள் தமது காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். தங்களுடைய அரசியலுக்காக இதனைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழ்த் தேசிய அரசியலை இ;ல்லாது ஒழிப்பதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர். இதில் ஒரு வேலையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பனரும் அவருடன் சேர்ந்த சிலரும் முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களது கட்சி அரசியலை செய்வதற்காக, மக்களின் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறானர்கள் தமிழ்த் தேசிய அரசியலை இல்லாது ஒழிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மகிந்த ஆட்சிக் காலத்தில், அந்த அரசாங்கத்துடன் சேர்ந்து மக்கள் மத்தியில் அராஜகங்களைப் புரிந்தார்கள். அவற்றில் தோற்றுப்போன இவர்கள், இப்போது அவர்களது பலவீனத்தால் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்” என சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
03 Jul 2025