2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை-கருணாநிதி

Super User   / 2010 ஜூன் 27 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வாழ் தமிழ் மக்கள் சொல்ல முடியாதளவு துன்பங்களை அனுபவித்து வருவதாக திராவிட முன்னேற்ற கழக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கோவையில் இடம்பெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இன்று மாலை  தமிழக முதல்வர் மு.கருணாநிதி நிறைவு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இங்கு உரையாற்றிய அவர்,

எல்லா மக்களும் ஏற்கக்கூடிய தீர்வொன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகளாக்கப்பட்ட மக்கள் வீடு திரும்ப முடியாமல் தொடர்ந்தும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.அகதி முகாம்களில் இருந்து திரும்பி சென்றவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட படி பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

மேலும், அந்தந்தக்காலங்களில் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டதே ஒழிய, இதுவரைக்கும் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு அடையாளம் காணப்படவில்லை எனவும் தமிழக முதல்வர் மு.கருணாநிதி குறிப்பிட்டார்.

இந்த நிலமை மாநாட்டில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு வேதனையையும் ஆழ்ந்த அவதானிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0

 • Zaman Monday, 28 June 2010 05:06 AM

  திராவிட முன்னேற்ற கழக தலைவா, தமிழக முதல்வரே அறிக்கையும் அனுதாபமும் தெரிவித்தால் மட்டும் போதாது நடவாடிக்கையிலும் செய்து காட்டுங்களேன் ........

  Reply : 0       0

  sheen Monday, 28 June 2010 09:43 PM

  தமிழர் மாநாடா? தமிழ் மாநாடா? தமிழ் மாநாடு என்றால் இலங்கைக்கு போதுமான மதிப்பளிக்கப்படவில்லை என்று அஸ்வர் ஹாஜியார் கூறுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா, என்று பார்க்க வேண்டும், தொண்டமானுக்கு அழைப்பு இல்லை என்கிறார், அழைத்தும் போகவில்லையா? கிறிஸ்தவ தமிழ் மாநாடு இஸ்லாமிய தமிழ் மாநாடு என்றெல்லாம் நடைபெறுவதனால் தனிநாயகம் அடிகளை பற்றி பேசுவதில் பொருளுண்டா? முதற்காரியம் இது தமிழ் மாநாடு அல்ல; செம்மொழி மாநாடு, என்றால் அதே காலகட்டத்தை சேர்ந்த மொழிகளும் வழக்கு மாறி 'திராவிட' என்ற தன்மையை அடையாமல் போயினவா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .