2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் நிலநடுக்கம்

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட் 

திருகோணமலை மாவட்டத்தில், கரையோரப் பிரதேசங்களில் , இன்று (15) அதிகாலை வேளையில் சிறிய நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது .

இன்று அதிகாலை 12.35 மணியளவில்   3 ரிச்சட் அளவில் இந்நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துளது.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகர், கிண்ணியா,  மூதூர், தம்பலகாமம் போன்ற பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டிருந்த து.

இருந்தபோதிலும், எவ்வித பாதிப்புகளும், அனர்த்தங்களும் இடம்பெறவில்லை எனவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, கிண்ணியா,மூதூர் பகுதியில் நிலங்கள், தரைகளில் சிறிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் சேத விபரங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--