2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

’மைசா’ படத்தில் இணைந்த புஷ்பா வில்லன்

Editorial   / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேஜிஎப், தேவரா படங்கள் மூலம் கவனிக்கப்பட்ட தாரக் பொன்னப்பா, சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது ராஷ்மிகா மந்தனா நடிக்கும் மற்றொரு பான்-இந்திய திரைப்படமான மைசாவில் தான் நடிப்பதாக தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு மைசா படக்குழு வெளியிட்ட போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், இந்தப் படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

இது ராஷ்மிகாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படமாகும். மைசா திரைப்படத்தை ரவீந்திர புல்லே இயக்குகிறார். அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .