2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் மீண்டும் டெங்கு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 05 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

இந்த மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில்; டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 18 பேர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என, அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் அனுசியா ராஜ்மோகன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவுவதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் தத்தமது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பாலையூற்று, செல்வநாயகபுரம், ஆண்டாங்குளம், வில்கம  ஆகிய பகுதிகளிலும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட நிலாவெளி, இக்பால் நகர்  ஆகிய பகுதிகளிலும்; கந்;தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட  பாதியகம பகுதியிலும்  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X