2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

திருட்டு பொலிஸ் கைது

Kamal   / 2020 ஜனவரி 11 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸார் என்ற பேரில் போலியாக அடையாளப்படுத்திகொண்ட ஒருவர், அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாத்தறை மித்ததெனயவில் வைத்து கைது செய்யப்பட்ட இவரிடத்திலிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட பொலிஸ் அடையாள அட்டையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அடையாள அட்டையை பயன்படுத்தி பொலிஸாரென பல வீடுகளுக்கு சென்றுள்ள அந்த வீடுகளிலிருந்த பொருள்களை திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவர் இறுதியாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியுள்ளதாகவும்,  அவருக்கு எதிராக 23 வழக்குகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவர் திருடிய பொருள்களை விற்பனை செய்து குறித்த நபர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--