2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தேர்தலுக்காக இலவச அஞ்சல் வசதி

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு,  இலவச அஞ்சல் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபதி ரஞ்ஜித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்று நிருபம்,  சகல மாகாணப் பிரதி அஞ்சல் மா அதிபர்கள்,  பிரதேச அஞ்சல் அத்தியட்சகர்கள், அஞ்சல் அதிபர்கள் மற்றும் உப அஞ்சல் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக , தேர்தல்  ஆணைக்குழுவுக்கு,  மாவட்ட தெரிவத்தாட்சி  உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி மற்றும்  உதவித் தேர்தல் ஆணையாளர்கள் போன்றவர்களால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்களை,  கிராம உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு, பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக அஞ்சல் இடப்பட்ட பொதிகளையும், கடிதங்களையும் முன்னுரிமையளித்து,  முதல் அஞ்சலிலேயே அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும்,  தேர்தல் பணிக்காக  வேறு அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுகளிடமிருந்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் கடித ஆவணங்களுக்காக,  மேற்படி முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் வரை,  இலவச அஞ்சல் வசதி அமுலில் இருக்குமென,  அஞ்சல் மா அதிபதி ரஞ்ஜித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .