2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

திலீபனின் நினைவாலயத்தில் இருந்த பதாகைகள் அறுக்கப்பட்டன

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் -  நல்லூரில் அமைந்துள்ள தியாகத் தீபம் திலீபனின் நினைவாலயத்தில், "புனிதம் காப்போம்" என மும்மொழிகளிலும் எழுதப்பட்டு கட்டப்பட்டிருந்த பதாகைகளை,  இன்று (30) அதிகாலை இனந்தெரியாத நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். 

நல்லூர் மகோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில், நினைவாலயத்தைச் சுற்றியுள்ளப் பகுதிகளில், தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், அப்பகுதியில் புனிதத் தன்மைகள் கெடாதவாறு நடந்துக்கொள்ளுமாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் பங்களிப்பில் நினைவாலயத்தில், மும்மொழிகளிலும், நேற்று  (29) இரவு பாதாதைகள் கட்டப்பட்டிருந்தன. 

இந்நிலையில்,  அவற்றை இன்று அதிகாலை 1.32 மணியளவில், இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்புடன் வந்த சிவில் உடை அணிந்த நபர்கள் இருவர், கட்டப்பட்டிருந்த பதாகைகளை அறுத்துவிட்டு, தமது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .