Editorial / 2019 நவம்பர் 08 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்புக்கு கோட்டாபய ராஜபக்ஷவே உதவிகளை வழங்கினார் எனக் குற்றஞ்சாட்டும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, 'அவர்களது ஆட்சி இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்திருந்தால் கொழும்பையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்திருப்பர்' என்றார்.
கொழும்பு மெனிங் சந்தையின் வியாபாரிகளை நேற்று (07) சந்தித்து கலந்துரையாடி போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு-10 மாளிகாவத்தை பகுதியிலிருந்து இயங்க ஆரம்பித்த தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்புக்கு கோட்டாவே உதவிகளை வழங்கியதாகவும், மத்தியஸ்தமான சிந்தனையுடைய முஸ்லிம்களை தாக்குதற்காகவே அவர்களுக்கு உதவிகளை கோட்டா வழங்கியதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அதேபோல் புலிகள் அமைப்பிலிருந்து சில குழுக்களையும் இணைத்துகொண்டு தமிழர்கள் மீதான தாக்குதல்களை நடத்தியதாகவும், அவர்களூடாகவே பௌத்தர்களை தாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தாகவும் சாடினார்.
'இராணுவத் தலைமையகத்திலிருந்தவர்களை வீதியில் தள்ளியுள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் இன்றும் அகதிகள் போன்று இருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது' என்றும் சாடினார்.
'இராணுத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியை ஷங்கரிலாவுக்கு விற்பனைச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ தரப்பின் ஆட்சி நீடித்திருந்தால் அப்பகுதியில் ஓர் அங்குலம் கூட மிஞ்சாமல் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து தனது பைகளை நிறைத்துகொண்டிருப்பார்' என்றார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago