2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணிக்கு 7 மணித்தியால சத்திரசிகிச்சை

Gavitha   / 2016 மார்ச் 07 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண்ணுக்கு, 7 மணித்தியாலங்கள் நீடித்த சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜயசிங்க, 'குறித்த கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள பிள்ளை, எவ்வித ஆபத்துமின்றி நலமான இருக்கிறது. இருப்பினும், குறித்த கர்ப்பிணிப் பெண், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறார்' எனக் கூறினார்.

வெலிக்கடை சிறைச்சாலையில், சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில், சிறைக்கைதியொருவரைப் பார்த்தவிட்டுத் திரும்பிய மேற்படி கர்ப்பிணிப் பெண், துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், 'நீங்கள், சமயங் என்பவரின் மனைவியா?' என விசாரித்துவிட்டே, அவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருப்பினும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண், சமயங் என்பவரின் மனைவி அல்ல எனவும், அவரது கணவர் சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவிப்பவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் தவறுதலாக மேற்கொள்ளப்பட்டது என்றும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட பொலிஸார்,
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .