2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

துப்பாக்கிமுனையில் முச்சக்கர வண்டி கொள்ளை (வீடியோ)

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகரெட் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கர வண்டியொன்றை, 1.85 மில்லியன் ரூபாய் பணத்துடனும் 750,000 சிகரெட்களுடனும் துப்பாக்கிமுனையில் நபரொருவர் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம், மாகொல பிரசேத்தில் நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர், சம்பவ இடத்திலிருந்து பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு அறிவித்ததுக்கமைய, முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன், ரதுபஸ்வெல பிரதேசத்தில் வைத்து, கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அத்திடியப் பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் 5 மில்லியன் ரூபாயைக் கொள்ளையிட்டிருப்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர், 12 நாட்களுக்கு முன்னர்தான் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வந்துள்ளார் எனத் தெரிவித்த, கடவத்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .