2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க சதி முயற்சி இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

இந்த சதி முயற்சியில் துருக்கி இராணுவத்தில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் அந்நாட்டு அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மக்களின் பாதுகாப்பு கருதி அந்நாட்டு ஜனாதிபதி மக்கள் முன் தோன்றியதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பிரச்சினையில் இலங்கையர் எவரும் கைதுசெய்யப்பட்டதாக தகவல் எதும் இதுவரை இல்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் அதிக அவதானத்துடன் உள்ளதாக அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் தேவைப்பட்டால் 00905340102105 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .