2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு உத்தரவு

Editorial   / 2019 நவம்பர் 21 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாள்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில், மிகுந்த அவதானத்துடனும் கவனமாகவும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுமாறு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவிடம் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துடன் அரசியல் பழிவாங்கல்கள், குழப்பங்கள் ஏற்படுமென பயம் மக்களிடம் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில், சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள்,  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பொறுப்பு என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .