2025 ஜூலை 09, புதன்கிழமை

நாட்டை வந்தடைந்த 450 பேர் கண்காணிப்பு நிலையங்களுக்கு

Editorial   / 2020 மார்ச் 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் - 19 என்ற வைரஸ் தொற்று நாட்டுக்குள் பரவால் தடுப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய, இத்தாலி, ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள இலங்கை பயணிகள் 450 பேர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அழைத்துச்செலப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை கந்தக்காடு மற்றும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக விமான நிலைய  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

17 பஸ்களில் இராணுவத்தினரால் குறித்த பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .