2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றுக்கு அருகில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் பெல்மடுளை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் இன்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெல்மடுளை நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து இலஞ்சம் வாங்கிய சந்தர்ப்பத்தில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

50 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பெல்மடுளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், பலாங்கொடை நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--