2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

‘ நின்ஜா ‘ குழுவின் சூட்டா கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 02 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நின்ஜா எனப்படும் பாதாளக் குழுவின் “ சூட்டா” என்ற நபர் தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பியன்வல- கடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து தன்னியக்க துப்பாக்கி ஒன்றும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும்  அங்கொட லொக்கா என்ற பாதாள குழுத் தலைவருடன் நெருக்கமானவ​ர் எனவும், இவருடன் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட, துவான் என்ற சந்தேகநபர் தற்சமயம் சிறைத் தண்டனைப் பெற்று வருகிறாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ​தே​வேளை, சூட்டாவிடம் பல்வேறு பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .