2026 ஜனவரி 21, புதன்கிழமை

5 ஆண் தொழிலாளர்களுக்கு குளவி கொட்டு

Editorial   / 2026 ஜனவரி 21 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

ஐந்து ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் புதன்கிழமை (21) மதியம் 1 மணிக்கு இடம் பெற்றுள்ளது

  மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்ட பு ப்ரௌன்லோ பிரிவில் பணி புரிந்து கொண்டு இருந்த வேளையில் அதிக உஷ்ணம் காரணமாக குளவி கூடு கலைந்து கொட்டியதில் ஆண் தொழிலாளர்கள் ஐவர்  மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் எம்.சிசி குமார் (வயது 31) வீ.நந்தராஜ் (வயது 36), ஜி.முருகையா (வயது 56) ஆர்.ரவி (வயது 50) ஏ.கோகிலன் (வயது 55) ஆகியவர்கள்  தோட்ட நிர்வாகி தோட்ட வைத்தியர் மூலம்  முச்சக்கர வண்டியில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X