2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

யாழ்.நல்லூரில் ஆடம்பர ஹோட்டல்; நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

Super User   / 2010 மே 10 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நல்லூர்ப் பகுதியில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட ஆடம்பரக் ஹோட்டலின் கட்டிட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் ஆடம்பரக் ஹோட்டல் அமைப்பதற்கு உள்ளூர் பிரமுகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து இதன் கட்டிட நிர்மாணப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மேற்படி ஹோட்டல் அமைப்பது குறித்து மக்களின் ஆலோசனை பெறுவது தொடர்பான கலந்துரையாடலொன்று நல்லூர் திவ்வியஜீவன் மண்டபத்தில் இன்று இடம்பெற்றிருந்தது.

இதில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகரசபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். 

  Comments - 0

  • Jananajakan Tuesday, 11 May 2010 05:00 AM

    யாருக்கு அவசரம் இந்த ஹோட்டல். முதலில் அரசியல் தீர்வு. பின்னர் அபிவிருத்தி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--