2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நல்லாட்சி அமைச்சரவையில் மாற்றம் இல்லை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் எவ்விதமான மாற்றங்களும் கொண்டுவரப்படமாட்டாது என்று நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.  

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், தங்களுடைய கடைமைகளையும் பொறுப்புக்களையும் செவ்வனே செயற்படுத்துகின்றனர் என்பதனால், அவ்வமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்பதனால், மாற்றங்களை செய்யாமல் இருப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.  

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், 2017ஆம் ஆண்டு ஜனவரியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகச் செய்தி வெளியாகியிருந்தது.  

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரை, அப்பதவிகளிலிருந்து விலக்கிவிட்டு, புதிதாக ஐவரை நியமித்து, அவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, தேசியப்பட்டியல் எம்.பிக்கள்
மூவரையும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தேசியப்பட்டியல் எம்.பிகள் இருவரையும் நீக்கிவிட்டே, அதற்கு பதிலாக ஐந்து புதியவர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், அச்செய்தியில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .