2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது பெறுபேறு

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முழுமையான பெறுபேறுகளை, நாளை மறுதினம் (18) திகதி மாலை 6.00 மணிக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முடிந்தவரை பெறுபேறுகளை விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில்,  நாளை மாலைக்கு முன்னதாக கூட இந்த விடயம் இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு 80 சதவீதமாக அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இன்று (16) நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

இது தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெறுபேறு என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .