2020 நவம்பர் 25, புதன்கிழமை

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பிரதமர் அறிவிப்பார்

Gavitha   / 2016 மார்ச் 07 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பு நாளை செவ்வாய்க்கிழமை அல்லது நாளை மறுதினம் புதன்கிழமையன்று விடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் கடன்சுமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமையன்று விசெட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இதன்போது, மீண்டுமொறு வரித் திருத்தம் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கமைய, அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரியை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அரசாங்கம் தற்போது எதிர்நோக்கியுள்ள கடன் சுமையைக் குறைக்கும் நோக்கத்திலேயே, இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே, இப்பிரச்சினைகள் குறித்து, பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என அரசாங்கத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .