2021 மார்ச் 04, வியாழக்கிழமை

நீதவானிடம் யானை: இருவருக்குப் பிணை

Kanagaraj   / 2016 மே 24 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் திலின கமகேவின் வசமிருந்த யானைக்காக போலியான ஆவணங்களைத் தயாரித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இருவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப்பணிப்பாளர் மற்றும் அத்திணைக்களத்தின் பெண் எழுதுவினைஞர் ஆகிய இருவருக்குமே, நுகேகொடை பிரதான நீதவான் கனிஷ்க விஜேரத்னவினால், நேற்றுச் செவ்வாய்க்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 2,500 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலுமே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .