2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நீதிபதிகளுக்கு ஐந்து நாள் பயிற்சி

Gavitha   / 2016 ஜூலை 25 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மத்திய இந்தியாவிலுள்ள போபால் நகரில் நடைபெறவுள்ளது.

சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் முகமாக, தேசிய நீதித்துறை அகடமியால் இந்த அனுபவங்களைப் பரிமாற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து நாள் பயிற்சி நிகழ்வாக இது முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாடுகளில் இதுவே முதலாவது நிகழ்ச்சியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் பிரதம நீதியரசரும் குறித்த அகடமியின் அங்கத்தரவருமான நீதிபதி டி.எஸ்.தாக்கூரின் வழிகாட்டலின் கீழ் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியானது, வழக்குகளை விசாரணை செய்யும் முறைமை, குற்றச்செயல்கள், சட்டங்கள் மற்றும் மரணதண்டனைகளின் பயன்கள் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேபோன்று, பங்களாதேஷ், பூட்டான், மியன்மார் மற்றும் நேபால் போன்ற நாடுகளிலுள்ள நீதிபதிகளுக்கும் நடைபெறவுள்ளது. இதற்காக, இலங்கையிலிருந்து 7 பேர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தப் பயிற்சிக்கு செல்லவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .