Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புதிதாக அமைக்கப்பட்ட அந்தோனியார் ஆலய நிர்மாணிப்புப் பணிகளுக்கு எமது நிதியுதவிகளை வழங்க முடியாமை போனமை எமக்கு மிகுந்த மன கவலையை தந்துள்ளது என இந்தியா - இராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவுக்கு வந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவிலுள்ள பழைய ஆலயம் இரு நாட்டு மக்களின் பங்களிப்புடன் தான் கட்டப்பட்டது. தற்போது புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்துக்கு எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக நிதியுதவி வழங்க விரும்பி இருந்தோம். அதனை இலங்கைக் கடற்படை ஏற்கவில்லை.
அது எமக்கு மிகுந்த மன கவலையை தந்துள்ளது. இருந்தாலும் இந்த புதிய ஆலயம் மிக அழகாக உள்ளது. இதனை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தனர்.
கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயம், வெள்ளிக்கிழமை (23) காலை 8.30க்கு யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளால் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து 120 பேரும் இந்தியாவிலிருந்து 3 படகுகளில் 82 பேரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025
11 Jul 2025