2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பகடிவதையால் 2000 மாணவர்கள் பல்கலைக்குச் செல்வதில்லை

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகடிவதைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்ற அச்சத்தில் 2000 மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (9) அலரிமாளிகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அபிலிருத்தியடைந்த நாடுகளில் 20 வயது இளைஞர், யுவதிகள் பட்டம் பெற்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டாலும் இலங்கையில் உயர்தரப் பரீட்சைக்கு ​தோற்றும் மாணவர்கள் பல்கலை அனுமதிக்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதென்றார்.

எனவே இந்த முறையை மாற்றுவதற்கான காலம் உருவாகியுள்ளதென்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .