2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

“பிக் மெச்” கட்டுப்பாடுகளை மீறினால் சட்டம் பாயும்

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கிடையிலான “பிக் மெச்” போட்டிகளின் போது, பாடசாலைகளின் நற்பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாதென கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் “பிக் மெச்” போட்டிகளின் பின்னர் ஏற்பாட்டு செய்யப்படடிருந்த களியாட்ட நிகழ்வுகளின் போது மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகியிருந்தாகவும், இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளால் பொதுப் போக்குவரத்து பிரயாணிகளுக்கு இடையூறு ஏற்படுவதை அனுமதிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் மகளிர் பாடசலைகளுக்குள் நுழைதல், மகளிர் பாடசாலை மாணவியருக்கு இடையூறு விளைவித்தல், மோசமான நடத்தைகள், வயோதிபர்களுக்கு இடையூறு விளைவித்தல்,  அநாவசியமாக முறையில் நிதி சேகரிப்பு, உள்ளிட்ட ஒழுக்கத்துக்கு முரணான செயற்பாடுகளை முன்னெடுப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறான ஒழுக்கத்துக்கு முரணான செயற்பாடுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஒரு தரப்பினரின் மகிழ்சிக்காக ஏனையவர்களை நெருக்கடிக்கு ஆளாக்குவது பொறுத்தமற்றதெனவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .