2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

பாசிக்குடாவில் 220 மில்லியன் ரூபா செலவில் உல்லாச விடுதி

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் முதலாவது உல்லாச விடுதி 220 மில்லியன் ரூபா செலவில் பாசிக்குடாவில் அமைக்கப்படவுள்ளது.

இவ் விடுதிக்கான அடிக்கல்லை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று காலை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பாசிக்குடாவிற்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .