2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பசிலின் மைத்துனன் வெளிநாடு செல்லத்தடை

Thipaan   / 2016 மார்ச் 28 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மைத்துனனான விஜித கலப்பதிக்கு, வெளிநாட்டுக்கு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

மாத்தறை பிரதான நீதவான் யுரேஷா டி சில்வாவே, வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அவருக்கு தற்காலிகத் தடைவிதித்துள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் இன்னும் சந்தேகநபர்கள் இருப்பார்களாயின் அவர்களையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட பிரதான நீதவான், வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .