2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பொதுச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில், கொழும்பில் நேற்று (11)  நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில்,  மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, மு.காவின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .