2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுடன் பேச்சு

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தில் எந்தவித மாற்றங்களும் இல்லையென   ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடும் என்றும் சின்னம் தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் அது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .