Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 19 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை வியாழக்கிழமை (20), புத்தளம் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை முதல், பொலிஸ் நடமாடும் சேவையொன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன் ஆரம்ப வைபவம், புத்தளம் பொலிஸ் நிலைய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த பொலிஸ் நடமாடும் சேவையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார் என, புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல அரசியல் பிரமுகர்கள், அரச திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொள்வர்.
எனவே, குறித்த நடமாடும் சேவையில் மக்கள் கலந்துகொண்டு, தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் எனவும், பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய, புத்தளத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், பொலிஸ் நடமாடும் சேவைகளை நடத்தி, அவற்றின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அவர் மேலும் ௯றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
32 minute ago
3 hours ago
3 hours ago