2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

புதிய நீர்ப்பாசனக் கொள்கை விரைவில்

Editorial   / 2017 மே 23 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நீர்ப்பாசனக் கொள்கை தொடர்பில், அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும், வெகுவிரைவில் முன்மொழிவொன்று முன்வைக்கப்படும் என்று, நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

நீர்ப்பாசன திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் புதியக் கொள்கை, நீர்ப்பாசனக் கொள்கைளை, மேலும் வலுவடையச் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத்தையும் ஏரிகளையும் பாதுகாப்பதற்கு, தற்போது சட்டங்கள் ஏதும் இல்லாமல் உள்ளது என்றும் எனவே, இதற்கான தீர்வை கொண்டுவரும் ​பொருட்டே, புதியக் கொள்கை கொண்டுவரப்படும் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது, கமநல சேவைக் கொள்கை மாத்திர​மே உள்ளதாகவும் இதனால், ஆறுகளையும் ஏரிகளையும் பாதுகாக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குழாய் கிணறுகள் மூல​ம் அவற்றை பாதுகாப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

​இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி அடையும் என்றும் 1,000 ஏரிகள், அபிவிருத்தி அடையவுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .