2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பொன்சேகாவின் 'பீல்ட் மார்சல்' பதவி பறிக்கப்படும் அபாயம்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வாரங்களாக, பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத் தளபதி உள்ளிட்டோரை பகிரங்கமாக விமர்சித்து வந்த, முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவின் “பீல்ட் மார்ஷல்” பதவி பறிபோவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து,ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்மானம் குறித்து, தமது ஆலோசகர்களுடன் கலந்துரையாடல்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அமைச்சர் பொன்சேகாவின் விமர்சனங்களால் இராணுவத்தினரை கவலையடைச் செய்வதாகவும், இது குறித்து பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி, இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதமருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வரும் நிலையில், அமைச்சர் பொன்சேகாவிடமிருந்து பீல்ட் மார்சல் பதவி அல்லது அமைச்சுப் பதவி என இரண்டில் ஒன்று பறிக்கப்படும் என அரசாங்க மட்ட தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து, ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--