2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பன்னால துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் பலி

Shanmugan Murugavel   / 2016 மே 29 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னால வெட்டகேயாவ பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடமொன்றுக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றைத் தொடர்ந்து பெண்ணொருவர் உள்ளடங்கலாக இருவர் மரணமடைந்துள்ளனர். 

இதேவேளை, துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிவிட்டு சென்ற துப்பாக்கி தாரிகளை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவரும் ஆண்ணொருவரும் பலியாகினர்.
மோட்டார்சைக்கிளில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள், ஆண்ணொருவரை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டபோது, பஸ்நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்த பெண்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அப்பெண்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதிலொருவர் மரணமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .