Kogilavani / 2017 மே 26 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அதிகாரத்தில் இருந்த சிலர், மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்த பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்' என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு, நேற்று பிற்பகல், கென்பரா நகரில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்பை உயர்ந்தபட்சம் நிறைவேற்றுவதற்காக பாடுபட்டு வருகின்றோம்.
சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை நிலைநாட்டுவதற்காக நாம் முயற்சித்து வருகின்றோ்.
அத்துடன், நாட்டு மக்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்காக தெளிவான அபிவிருத்தித் திட்டங்களையும், அனைத்து மக்களிடமும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி, மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படாவண்ணம் நிலையான சமாதானத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிற்போக்குவாதிகள் அரசாங்கத்தை வெறுப்புக்குள்ளாக்கி, இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமாதானத்தை உருவாக்குவதற்காக எப்போதும் அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்வதுடன், எந்தவொரு கட்சியினரோ, சமயத்தினரோ, இனத்தவரோ சமாதானத்தை சீர்குலைக்க முற்பட்டால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அரசாங்கம் பின்னிற்காது.
எந்த சவால்கள் வந்தாலும் மக்களுக்காக அரசாங்கம் முன்னோக்கி பயணிக்கும். அதற்கு தாய்நாட்டை நேசிக்கும் இலங்கைப் பிரஜைகளின் ஒத்துழைப்பை அவசியமாகும்” என்றார்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025