2021 மார்ச் 08, திங்கட்கிழமை

’பரதநாட்டியத்தை தெருவில் ஆட கூடாது’

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.நொசாந்த், எஸ்.நிதர்ஷன்

 

இனிவரும் காலங்களில், பரதநாட்டியத்தை தெருவிலே ஆட முடியாது வகையில், அதற்கான சுற்று நிருபத்தை விரைவில் வெளியிடவுள்ளதாக, வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இந்தியத் துணைத்தூதரகமும் இணைந்து நடத்திய, “தெய்வீக சுகானுபவம் – 7” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதிக் கலையரங்கில், இன்று (04) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், பரத நாட்டியத்தை, யாரையும் வரவேற்பதற்காகத் தெருவிலே ஆடக்கூடாதெனவும் பரதநாட்டியத்தை தெருவிலே ஆடுகின்ற நிலைமை இருக்கக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இது தொடர்பில், வடக்கு மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் சுற்றுநிரூபம் அனுப்ப இருப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .