2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

பேராதனை பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டம்; பலவந்தமாக அழைத்து சென்ற பொலிஸார்

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களை  பொலிஸார் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களை பின்னர் பல்வேறு  இடங்களில் பொலிஸார் இறக்கி விட்டுச் சென்றிருப்பதாக மாணவர் ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

சுமார் 400 மாணவர்கள் 5 பஸ்களில் பலவந்தமாக பொலிஸாரினால் ஏற்றிச் செல்லப்பட்டிருப்பதாகவும்   டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

இந்நிலையில், பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சியில் மேற்படி மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்  கொழும்பு வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .