2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிரதி ஊடக அமைச்சர் பதவியிலிருந்து மர்வின் சில்வா இன்று மாலை ராஜினாமா

Super User   / 2010 மே 07 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE
பிரதி ஊடகத்துறை அமைச்சர் மர்வின் சில்வா தனது பதவியை இன்று மாலை ராஜினாமா செய்யவுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சற்று நேரத்துக்கு முன் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தன.

கெஹலிய ரம்புக்வெல்ல, புதிய ஊடகத்துறை அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் நேற்று முன்தினம் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பதவியும் மர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த பிரதி அமைச்சர் மர்வின் சில்வா, ஊடகத்துறை மற்றும்  நெடுஞ்சாலைகளுக்கான பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் இரண்டையும் தானே வகிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இருப்பினும் இன்று மாலை அவர் பிரதி ஊடகத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான பணிப்புரையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கிய நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.

இதேவேளை, ஊடகத்துறைக்கு பிரதி  அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை  என்றும் அந்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .