2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பொரலஸ்கமுவயில் விபசார விடுதி முற்றுகை; நான்கு பெண்கள் கைது

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கமுவ பகுதியில் விபசார விடுதியொன்றை முற்றுகையிட்டுள்ள பொலிஸார் நான்கு பெண்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த விபசார விடுதி நடத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

இதன்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்கள் பொரலஸ்கமுவ, அம்பாந்தோட்டை, நாரஹேன்பிட்டி மற்றும் மனகந்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

30 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்தது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--