2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பார்வதி அம்மாளின் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம்-எம்.கே.சிவாஜிலிங்கம்

Super User   / 2010 மே 14 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் உடல்நிலை தேறிவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் சற்று முன்னர் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை இரவு முதல் யாழ். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், அங்கு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பார்வதி அம்மாளுக்கு இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் சிகிச்சையளிப்பதற்கு விசா மறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--