Freelancer / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானை ஒரே இரவில் வீழ்த்திவிட முடியும் என்றும் அந்த இரவு நாளைய இரவாகக் கூட இருக்கலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி ட்ரம்ப் இந்த கருத்தை வெளியிட்டார்.
ஈரானின் இராணுவ பலம் மற்றும் அதன் உள்கட்டமைப்புகளை மிகக் குறுகிய காலத்தில் செயலிழக்கச் செய்யும் வல்லமை அமெரிக்காவிடம் உள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஈரானின் அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது ஏற்கனவே தாக்குதல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரம்பின் இந்த ஒரே இரவு எச்சரிக்கை போரின் தீவிரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
அந்த இரவு நாளைய இரவாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருப்பது, எந்த நேரத்திலும் ஒரு பாரிய தரைவழி அல்லது வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (a)
17 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago