2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பார்வதி அம்மாளை இந்தியா கொண்டுசெல்ல திருமாவளவன் தொடர்புகொள்ளவில்லை- சிவாஜிலிங்கம்

Super User   / 2010 ஜூன் 18 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVEபிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை இந்தியா கொண்டு செல்வதற்காக தொல்.திருமாவளவன் தன்னுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் சற்று முன் தெரிவித்தார்.

தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரபாகரனின் தாயாரை மீண்டும் இந்தியாவுக்கு  அழைத்துச்செல்வதற்காக சிவாஜிலிங்கத்துடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார் என இந்திய இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து தமிழ்மிரர் இணையதளம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப்பியது.

இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு செல்ல பார்வதி அம்மாள் விரும்பவில்லை என்றும் கே,சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையதளத்திடம் மேலும் குறிப்பிட்டார்.

பார்வதி அம்மாள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--