Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூன் 05 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதற்கு முயலுகின்ற எந்தவொரு நபரையும் மற்றும் குழுவையும் எவ்விதமான பாராபட்சமும் அந்தஸ்துமின்றி அவர்களுக்கு அல்லது அக்குழுவினருக்கு எதிராக கடுமையான முறையில் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பியந்த ஜயக்கொடியின் கையொப்பத்தில், பொலிஸ் தலைமையகம் நேற்று(04) விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தங்களுடைய பொலிஸ் பிரிவுக்குள் இவ்வாறான முரண்பாடுகள் அல்லது அனர்த்தங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் இடம்பெறுமாயின், அதற்கான முழுப் பொறுப்பையும் சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான நிலைமையை தடுப்பதற்காக சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள், தொகுதிக்கு பொறுப்பான அதிகாரிகள், அதேபோல பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
இது தொடர்பான அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிரூபத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கையை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எடுத்துவருகின்றார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடிய மிகவும் சொற்பமானவர்கள், சமூகவலைத் தளங்களில் மிகவும் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு, இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு மற்றும் மதங்களை நிந்திக்கும் வகையில் பல்வேறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வாறானவர்கள், இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவ்வாறான கூற்றுகளை வெளியிட்டுள்ள நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்டத்தை மிகவும் கடுமையான செயற்படுத்துவதற்கு பொலிஸார் தற்போதே கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
8 hours ago
8 hours ago