2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பரிசுகள் பெறுவதும், கொடுப்பதும் குற்றம்

Gavitha   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையோ, பரிசு உறுதிச்சீட்டுக்களையோ பெறுவதானது, இலஞ்ச சட்டத்தின் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும் என்பதை அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அறிவுறுத்துவதற்கு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்புடைய தீர்மானம், தேசிய ஊழல் ஒழிப்பு மாநாட்டின் போது எடுக்கப்பட்டதாகவும் வர்த்தகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அரசாங்க ஊழியர்களுக்கு இலஞ்சம் கொடுப்பதை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .