Editorial / 2020 மார்ச் 14 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு சுற்றுலாப் பிரயாணம் மேற்கொள்ள வந்திருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த மூவர் இன்று (14) காலை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளபோதே, அவர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் ரஸ்யா - மொஸ்கோ நகருக்கு பயணிக்கு எரோப்ளோட் விமானத்தில் பயணிக்கும் நோக்கிலேயே விமான நிலையத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 7.00 மணியளவில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகைத் தந்தன 1631 இலங்கையர்களை மட்டக்களப்பு கந்தகாடு தனியார் பல்கலைக்கழக வளாகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, தியதலாவை,கஹாகொல்ல உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனிமைப்படுத்தபட்ட மருத்துவ ஆய்வுக்கான மய்யங்கள் தற்போதுவரை ஒருவரும் அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
13 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
2 hours ago