2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

புலனாய்வாளர்கள் 07 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம்

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், இராணுவப் புலனாய்வு பிரிவின் 07 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரால் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் இன்று (07) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடாத சிலரால் கிரிதலே, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் அடைத்து வைக்கும் நோக்குடன், பிரகீத் எக்னெலிகொடவை கடத்துவதற்கு சதி முயற்சியில் ஈடுபட்டமை , அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் ஷம்மி அர்ஜுன் குமாரரத்ன, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் பிரபோத சிறிவர்தன உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவின் 7 பேருக்கு எதிராகவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .