Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 16 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைக்கு அமைவாக, நியாயமொன்று பெற்றுக்கொடுக்கப்படா விடின், எதிர்வரும் நாட்களில் நாடு தழுவிய ரீதியில், பணிப்புறக்கணிப்பொன்றை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக, அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், தமது சங்கத்தின் பிரதிநிதிகளுடன், நாளைய தினம் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்து இறுதித் தீர்மானத்துக்கு வரவுள்ளதாக, அகில இலங்கை தனியார் பஸ் நிறுவன சம்மேளனம் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய, பஸ் கட்டண அதிகரிப்பு குறித்த சூத்திரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சரியான தீர்வு வழங்கப்படாவிடின், தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago