2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பஸ் சாரதிகளுக்கிடையில் மோதல்: ஒருவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

இலங்கை போக்குவரத்துச் சபை திருகோணமலை கிளை பஸ்ஸின் சாரதியைத் தாக்கிய, திருகோணமலையில் தனியார் பஸ்ஸொன்றின் சாரதியை, இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, நேற்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார்.

பாலையூற்று திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

திருகோணமலையில் இருந்து புல்மோட்டைக்குப் பயணிக்கும் தனியார் பஸ்ஸின் சாரதிக்கும் இலங்கை போக்குவரத்து பஸ்ஸின் சாரதிக்குமிடையில் ஏற்பட்ட போக்குவரத்து நேரம் சம்பந்தமான மோதலில் தனியார் பஸ்ஸின் சாரதி, இலங்கை போக்குவரத்து பஸ்ஸின் சாரதியை தாக்கியதாகத் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபரைப் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை திருகோணமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X