2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

பி.எஸ்.டீ வாகன விபத்துக்களால் 6 பேர் பலி

Kanagaraj   / 2016 ஜூலை 10 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு (பி.எஸ்.டீ) வாகனங்களினால், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 16ஆம் திகதிவரையிலும் இடம்பெற்ற விபத்துக்களில் 6பேர் பலியானதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, இராஜங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா மேற்கண்ட தகவலை வெளியிட்டு பதிலளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .