2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய 5 பேர் கைது

George   / 2016 ஜூலை 10 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாக்கப்பட்ட தொல்பொருட்கள் உள்ள பகுதியில் குழி தோண்டுவதாக கூறி, புதையில் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் எதிமலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் உதவியுடன் எதிமலை பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போது இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்கள், பூஜைக்கான பொருட்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மொனராகலை, நக்கலை மற்றும் எதிமலை பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை சியம்பலான்டுவ மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .